முகப்பு
இந்தியா

பிகார் பேரவை முதற்கட்டத் தேர்தல்: 53.54% வாக்குகள் பதிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 53.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
பிகார் தேர்தலில் வாக்களித்த முதியவர்
பகிர்:

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 53.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகாரில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 53.54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதன்படி ஜமுய் மாவட்டத்தில் 57.59 சதவீதமும், லக்கிசராய் 55.01 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் கயாவில் 54 சதவீதமும், நபிநகரில் 57.14 சதவீதமும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தெளரையா தொகுதியில் 62.5 சதவீதமும், குறைந்தபட்சமாக சந்தேஷ் தொகுதியில் 43.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →