முகப்பு
இந்தியா

பிகாரில் வாக்குப்பதிவு முகவர் உயிரிழப்பு: வாக்குச்சாவடியில் பரபரப்பு

பிகாரில் வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு முகவர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
கோப்புப்படம்
பகிர்:

பிகாரில் வாக்குப்பதிவு முகவர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது வாக்குச்சாவடியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பிகாரில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வாக்குச்சாவடிகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,  நவாடா மாவட்டத்தில் ஹிசுவா பகுதியில் உள்ள புல்மா சாவடியில் வாக்குப்பதிவு முகவர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கிருஷ்ணா சிங் என்பவர் வாக்குச்சாவடியில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இதனால், அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. சற்று நேரம் பரபரப்பும் நிலவியது. 

அதேபோன்று ரோஹ்தாஸில் வாக்களிக்க வந்த விவசாயி ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது மயக்கமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →