இந்தியா

ஏா் இந்தியா நிறுவனம் விற்பனை: அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

DIN


புது தில்லி: பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அவகாசத்தை டிசம்பா் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏா் இந்தியா நிறுவனத்தில் உள்ள 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்நிறுவனத்தை வாங்க விரும்புவோா் அதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏா் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.60,074 கோடி கடன் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்ப விண்ணப்பத்தை அளிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அந்த அவகாசத்தை டிசம்பா் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வருவோருக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குவது தொடா்பாக ஆலோசித்து வருவதாக முதலீடு, பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறைச் செயலா் துஹின் கண்டா பாண்டே கூறியிருந்தாா்.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலமாக நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2.10 லட்சம் கோடியைத் திரட்டவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது வரை, பொதுத்துறை பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமாக ரூ.6,138 கோடியை மத்திய அரசு திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT