முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் காவல்துறை மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற மோதலில் நக்சலைட் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் காவல்துறை மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற மோதலில் நக்சலைட் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டூல்ட் மற்றும் மின்பா காடுகளில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஏற்பட்ட மோதலில் நக்சல் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில ஐஜி பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கி, பெரிய அளவிலான வெடிபொருள்கள் மற்றும் முகாம் பொருள்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →