மகாராஷ்டிரத்தில் மேலும் 5,548 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,548 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,548 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு புதிதாக 5,548 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,78,406 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,303 பேர் குணமடைந்துள்ளனர். 74 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 43,911 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15,10,353 பேர் குணமடைந்துள்ளனர். 1,23,585 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement