முகப்பு
இந்தியா

ஒடிசாவில் நவ.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கக்கத்தி நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 31 அக்டோபர், 2020 at 3:23 PM
கோப்புப் படம்
பகிர்:

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கக்கத்தி நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மாநில தொற்றுப் பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநில அரசு மாநிலத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படும் எனத் தெரிவித்துள்ள வேளையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 16ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 116 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.