முகப்பு
இந்தியா

தாராவியில் புதிதாக 4 பேருக்கு மட்டுமே கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 31 அக்டோபர், 2020 at 10:25 PM
தாராவி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை:

மும்பையில் புதிதாக 993 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 680 பேர் குணமடைந்துள்ளனர், 32 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,57,500 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,27,822 பேர் குணமடைந்துள்ளனர், 10,250 பேர் பலியாகியுள்ளனர். 18,753 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தாராவி:

தாராவியில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,547 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கெனவே 3,123 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், 113 பேர் மட்டுமே கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.