இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் பொருளாதார சரிவின் தொடக்கம்: ராகுல்

DIN


இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்தான் தொடங்கியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஜிடிபி -23.9. பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் அழிவு தொடங்கியது. அப்போது முதல் அடுத்தடுத்து தவறான கொள்கைகளையே அரசு அறிமுகப்படுத்தியது" என்றார்.  

இதேபோல், பொருளாதார சரிவுக்கு அரசுதான் காரணம் என பிரியங்கா காந்தியும் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"6 மாதங்களுக்கு முன்பே 'பொருளாதார சுனாமி' என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். அரசு வெறும் கண்துடைப்புக்காக தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. பாஜக அரசுதான் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவிகிதம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT