முகப்பு
இந்தியா

ஆப்கனில் சாலையோர கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் பலி 

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வியாழக்கிழமை காலை சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 

Updated On : 3 செப்டம்பர், 2020 at 12:02 PM
3 civilians killed in roadside mine blast in Afghanistan
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வியாழக்கிழமை காலை சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் பச்சேரகம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

கண்ணிவெடி சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.