இந்தியா

பஞ்சாபில் மேலும் 4 எல்.எம்.ஏ.க்களுக்கு கரோனா பாதிப்பு

IANS

பஞ்சாபில் மேலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மொத்த பாதிப்பு 33 ஆக உயர்ந்துள்ளது. 

ரன்தீப் நபா, அங்கத் சிங், அமன் அரோரா மற்றும் பர்மிந்தர் திண்ஷா ஆகியோர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் மேலும் கூறுகையில், 

பாதிக்கப்பட்ட எல்.எம்.ஏ.க்கள் விரைவில் மீண்டு வரப் பிராத்திக்கிறேன். கரோனாவுக்கு எதிரான போராட்டம் உண்மையானது. மேலும், முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும். 

தொற்று ஏற்பட்டால் விரைவாக சிகிச்சையைத் தொடங்குவது அனைவருக்குமான பொறுப்பு. மேலும் ஐந்து அமைச்சர்கள் இந்த தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் சிகிச்சை மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்தார். 

இதுவரை பஞ்சாபில் தொற்று காரணமாக 106 பேர் பலியாகினர். புதிதாக 1,514 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 56,989 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT