இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.72 லட்சம் கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் 

DIN

புதுதில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,72,179 கரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 4,55,09,380 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் 10,12,367 பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்த நிலையில் , புதன்கிழமை இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

"இந்தியா முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பரவலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகயளவிலான பரிசோதனைகள் மூலம் தொற்று பாதித்தவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்தவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன. இறுதியாக இறப்பு விகிதத்தை குறைக்கவும் உதவுவதாக" சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை  37,69,524 ஆக உயர்ந்தன, இதில் 8,01,282 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், 29,01,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  66,333 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே, இந்தியாவின் இறப்பு விகிதம் 1.76 சதவீதமாக உள்ளது, இது உலக அளவில் மிகக் குறைவானது.  ஒன்றாகும், உலக அளவில் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர், இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும், அதே நேரத்தில் உலக அளவில் 10 லட்சம் பேருக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT