இந்தியா

சீனாவின் நள்ளிரவு ஊடுருவலுக்கு பதிலடி: இந்திய ராணுவ நிலைகளில் மாற்றம்

DIN


கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய எல்லைப் பகுதிக்குள் நள்ளிரவில் ஊடுருவ முயன்ற சீனப் படைகளுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், அப்போது, ரெக்கின் கணவாயின் சிலப் பகுதிகளை கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

1962-ஆம் ஆண்டு இந்திய - சீனப் படைகளுக்கு இடையே நேரிட்ட போரின் போது, கிழக்கு லடாக்கில் தோராய கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே ரெக்கின் கணவாய் பகுதியை சீனப் படைகள் ஆக்ரமித்தன. அதுமுதல், ரெக்கின் கணவாய் பகுதி சீனப் படைகள் வசம் இருந்தது.

தற்போது, ரெக்கின் கணவாய்ப் பகுதியில் சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு இந்தியப் படைகள் முன்னேறி, அதனைக் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், 1962-ஆம் போருக்குப் பின், சீனப் படைகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனப் படையின் ஊடுருவலை முறியடித்ததில் இந்த சிறப்பு எல்லைப் பாதுகாப்புப் படையின் பணி முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT