இந்தியாவில் கரோனா பாதிப்பு 39 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை புதன்கிழமை 39 லட்சத்தை கடந்தது.
புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 39 லட்சத்தை கடந்தது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 83,341 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,36,748-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தமாக கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 30,37,152-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 1,096 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 68,472-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 8,31,124 போ் சிகிச்சையில் உள்ளனா்.
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,02,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,66,79,145 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 11,69,765 பரிசோதனைகள் வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
பாதிப்பு: 39,36,748
பலி: 68,472
குணமடைந்தோர்: 30,37,152
சிகிச்சை பெற்று வருவோர்: 8,31,124