மூன்று நாள்களில் 3.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஜே.இ.இ மெயின் தேர்வில் பங்கேற்பு
ஜேஇஇ மெயின் தேர்வில் கடந்த மூன்று நாள்களில் 3,43,958 பேர் தேர்வெழுதி உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.
புது தில்லி: ஜேஇஇ மெயின் தேர்வில் கடந்த மூன்று நாள்களில் 3,43,958 பேர் தேர்வெழுதி உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வு செப் 1-ம் தேதி தொடங்கியது.
இந்தாண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 4,58,521 பேர் பதிவு செய்த நிலையில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 3,43,958 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், கரோனா தொற்றையும் மீறி ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ப மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. மாணவர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு ஆதரவளித்த அனைத்து முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இந்த நுழைவுத்தேர்வை தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) நடத்தி வருகிறது. செப்டம்பர் 1 முதல், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடத்தி வருகிறது. செப்டம்பர் 6 வரை தொடர்ந்து தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.