தேவைப்பட்டால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்: ஐசிஎம்ஆர் 
இந்தியா

விருப்பப்படுவோர் கரோனா பரிசோதனை செய்துகொள்ள அனுமதி: ஐசிஎம்ஆர்

பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், தேவைப்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றம் செய்துள்ளது.

ENS


பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், விருப்பப்பட்டால், கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றம் செய்துள்ளது.

தற்போதுவரை, கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இனி, கரோனா பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோர் யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கும்படி ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. 

கரோனா பரிசோதனை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் சில மாற்றங்களை செய்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் வெள்ளிக்கிழமை மாலை புதிய அறிக்கையை வெளியிட்டது.

அந்த புதிய வழிகாட்டு நெறிமுறையில், நாட்டை விட்டு நாடு செல்லுதல் அல்லது மாநிலங்களில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்வோர், அதன் நுழைவு வாயிலில், கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் அளிப்பதை கட்டாயமாக்கலாம் என்று தேசிய கரோனா பேரிடர் குழு வலியுறுத்துகிறது.

அதே வேளையில், பொதுமக்களில், கரோனா பரிசோதனை செய்து கொள்ள யார் விரும்பினாலும், தேவைப்பட்டாலும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். 

பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் யார் வேண்டுமானாலும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், பொதுவாக கரோனா அறிகுறி இருப்பவர்கள் தான் கரோனா பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

மேலும், பிரசவங்கள் போன்ற அவசரகால சிகிச்சைகள் எதுவும் கரோனா பரிசோதனைக்காக தாமதப்படுத்தக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கும் நபர்கள், அறிகுறி இல்லாமல் இருந்தாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதர நோய்கள் இருப்பவர்களாக இருப்பின் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT