ஆசிரியர் தினத்திற்கு கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்ட கூகுள் 
இந்தியா

ஆசிரியர் தினத்திற்கு கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்ட கூகுள்

பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய ஆசிரியர் தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது.

DIN

பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய ஆசிரியர் தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இந்தியா முழுவதும் ஆசிரியர்களின் பணியை கெளரவிப்பதற்காக  கூகுள் நிறுவனம் கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

ஓவியம், கோள், கணித சின்னங்கள் போன்றவற்றின் மூலம் கவன ஈர்ப்பு சித்திரத்தில் பல்வேறு பாடங்களை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கரோனா பேரிடரில் வகுப்புகள் வகுப்பறையிலிருந்து இணைய திரைகளுக்கு மாறினாலும் ஆசிரியர்கள் சேவை தொடர்வதாகத் கூகுள் இந்தியா தனது சுட்டுரைப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT