இந்தியா

தெலங்கானா: மோட்டார் வாகன விதியிலிருந்து விலக்களிக்க வலியுறுத்தல்

DIN

ஹைதராபாத்: ஊரடங்கு எதிரொலியால் தெலங்கானாவில் மோட்டார் வாகன வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று பேருந்து மற்றும் கார் ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய தெலங்கானா மாநில கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் சையத் நிஜாமுதீன் பேசியதாவது, ''ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கார் மற்றும் பேருந்துகள் இயங்கவில்லை.

இதனிடையே மோட்டார் வாகன வரியை செலுத்த வேண்டும் என்று அரசு கூறுவது ஏற்கக்கூடியதல்ல. ஊரடங்கில் ஓடாத வாகனங்களுக்கு அரசு பயன்படுத்தாத உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.

ஊரடங்கில் ஓடாத வாகனங்களுக்காக வரியினை எவ்வாறு செலுத்த இயலும். அரசு தங்களது குறைகளை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஜூன் மாதம் முதல் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், அரசு அதனை கவனத்தில் கொள்ளாததால், ரூ.1 லட்சமாக வரி குவிந்தது.

ஊரடங்கின்போது ஓடிய வாகனங்களுக்காக வரியினை செலுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம். ஆனால் ஊரடங்கில் இயங்காத வாகனங்களும் வரியினை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்'' என்று கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT