மடாதிபதி கேசவானந்த பாரதி 
இந்தியா

கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்

அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பின் மனுதாரரும், கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

DIN

அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பின் மனுதாரரும், கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதியுமான கேசவானந்த பாரதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சுவாசக்கோளாறு மற்றும் இதயக்கோளாறு காரணமாக மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 80.

இவர் 1961 ஆம் ஆண்டு எட்னீர் மடத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். மேலும், ஏறக்குறைய 15 ஆண்டுகளாக ‘யக்ஷகனா மேளா’ என்ற அமைப்பின் மூலமாக கர்நாடக இசையை கற்றுக்கொடுக்கிறார். மடத்தில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 

கேரள அரசு நிலச் சீர்திருத்தச்சட்டத்தின் கீழ், எட்னீர் மடத்தின் நிலங்களை கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

எஸ்.எம். சிக்ரி தலைமையிலான 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 1973, ஏப்ரல் 24 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியையும் திருத்த செய்ய முடியும். அதேநேரத்தில் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு அல்லது முக்கிய அம்சங்களை மாற்றவோ திருத்தவோ அதிகாரமில்லை என்று அடிப்படை உரிமைகளை மீட்கும் தீர்ப்பாக அது இருந்தது. 

உச்ச நீதிமன்றத்தில் அதிக நாள்கள்(68 நாள்கள்) விசாரிக்கப்பட்ட வழக்காக இன்றும் கேசவானந்த பாரதி வழக்கு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT