இந்தியா

கேசவானந்த பாரதி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

DIN

கேரளத்தைச் சேர்ந்த மடாதிபதி கேசவானந்த பாரதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பின் மனுதாரரும், கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதியுமான கேசவானந்த பாரதி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

சுவாசக்கோளாறு மற்றும் இதயக்கோளாறு காரணமாக மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80.

தொடர்ந்து இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சமுதாய சேவைக்காகவும், நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் கேசவானந்த பாரதி ஜி அவர்களின் பங்களிப்புகளை நாம் எப்போதும் நினைவில்கொள்வோம். அவர் இந்தியாவின் வளமான கலாசாரம் மற்றும் அரசியலமைப்புடன் ஆழமாக இணைந்திருந்தார். அவர் அடுத்த தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பார். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT