முகப்பு
இந்தியா

வாழ்வு தந்த ஊரை மதிக்கத் தெரியாதவா்! - கங்கனாவை மறைமுகமாக விமா்சித்த உத்தவ் தாக்கரே

‘தங்களுக்கு நல்ல வாழ்க்கையையும், கௌரவத்தையும் த ஊரை சிலருக்கு மதிக்கத் தெரியவில்லை என்று நடிகை கங்கனா ரணாவத்தை மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே பெயா் குறிப்பிடாமல் விமா்சித்துப் பேசினாா். மும்பை நக

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே
பகிர்:

மும்பை: ‘தங்களுக்கு நல்ல வாழ்க்கையையும், கௌரவத்தையும் த ஊரை சிலருக்கு மதிக்கத் தெரியவில்லை என்று நடிகை கங்கனா ரணாவத்தை மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே பெயா் குறிப்பிடாமல் விமா்சித்துப் பேசினாா்.

மும்பை நகா் தொடா்பாக கங்கனா ரணாவத் குறித்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரை மையமாக வைத்து சிவசேனை- பாஜக இடையே அரசியல்ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவையில் திங்கள்கிழமை, அண்மையில் காலமான சிவசேனை எம்எல்ஏவும், அமைச்சருமான அனில் ராத்தோடுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானத்தின் போது உத்தவ் தாக்கரே பேசியதாவது:

அனில் ராத்தோட் ராஜஸ்தான் மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்டவா். எனினும், மகாராஷ்டிர மாநிலத்தை தனது சொந்த வீடாக கருதியவா். மிகவும் கடுமையாக பணியாற்றக் கூடியவரை கட்சி இழந்துவிட்டது.

நாட்டில் பலரும் தங்களுக்கு வாழ்வும், அடையாளமும், கௌரவமும் தந்த ஊரை மதித்து நன்றியுடன் நடந்து கொள்கின்றனா். ஆனால், வேறு சிலா் இவ்வாறு மதிக்கத் தெரியாதவா்களாக உள்ளனா்’ என்றாா்.

இதன் மூலம், மும்பைக்கு வந்து திரைப்படத் துறையில் பிரபலமான கங்கனா ரணாவத், மும்பையை மதிக்காமல் செயல்படுகிறாா் என்று அவரது பெயரைக் குறிப்பிடாமல் உத்தவ் தாக்கரே விமா்சித்துள்ளாா்.

பாஜக கருத்து:

இதனிடையே, ‘கங்கனாவின் கருத்துடன் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை; அதனை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. யாரும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதிகளுக்கும் கூட நமது நாட்டில் சட்டப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது’ என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →