இந்தியா

தில்லியில் கரோனா நோய்த்தொற்று இரண்டு லட்சத்தை தாண்டியது

DIN

புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை முதன் முறையாக ஒரே நாளில் 4,039 போ் கரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டதை கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகரில் மொத்தம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,01,174-ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை இந்நோய்த் தொற்றால் 20 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,638-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் முதன் முறையாக கரோனா நோய்த்தொற்று நாலாயிரத்தை கடந்ததற்கு முக்கிய காரணம் முதன் முறையாக அதிகபட்ச கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதன்கிழமை ஒரே நாளில் 54,517 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆகஸ்ட் முதல் பரிசோதனைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரப்படுகிறது. தில்லியில் இதுவரை மொத்தம் 19,03,780 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதன்கிழமை 1,396 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 1,72,763-ஆக அதிகரித்தது. இத்தோடு தற்போது தில்லியில் 20,543 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT