கரோனா முதல்நாளிலிருந்தே ஏழைகளுக்கு உதவுவதே இலக்கு
கரோனாவின் முதல்நாளிலிருந்து சாலையோர வியாபாரிகள் உள்பட ஏழை மக்களுக்கு உதவ அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாகரோனா முதல்நாளிலிருந்தே ஏழைகளுக்கு உதவுவதே இலக்கு
கரோனாவின் முதல்நாளிலிருந்து சாலையோர வியாபாரிகள் உள்பட ஏழை மக்களுக்கு உதவ அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கரோனாவின் முதல்நாளிலிருந்து சாலையோர வியாபாரிகள் உள்பட ஏழை மக்களுக்கு உதவ அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சுயத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் பயனடைந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 3 சாலையோர வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கலந்துரையாடினார்.
இதில் அவர் பேசியதாவது '' வியாபாரிகளுக்கான சுயத்திட்டமிடல் திட்டத்தின் மூலம் பயனடைய வியாபாரிகள் உரிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்காக எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம். நகராட்சி அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலமும் வியாபாரிகள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இந்த திட்டத்தின் நோக்கமே சாலையோர வியாபாரிகள் எளிமையாக மூலதனத்திற்கான பணத்தை பெற வேண்டும் என்பதேயாகும். இந்த திட்டத்தில் இணைவதால் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் மூலாதாரத்தொகையை பெற இயலும்.
ஏழை நண்பர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கின் முதல்நாளிலிருந்தே இத்தகைய நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் வகையில் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்தவகையில் சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக ஜூன் 1-ஆம் தேதி முதல் 'சுயத்திட்டமிடல்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 4.5 லட்சம் வியாபாரிகள் இணைந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உரிய ஆவணங்களை வழங்கியுள்ளனர். இதில் 2.5 லட்சம் வியாபாரிகளின் ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் வழங்கப்பட்ட ஆவணங்களில் 1.4 லட்சம் வியாபாரிகளுக்காக ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த விண்ணப்பங்களில் மத்தியப்பிரதேசத்திலிருந்து அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாடு முழுவதுமான இந்த திட்டத்தில் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 47 சதவிகிதத்தினர் விண்ணப்பித்துள்ளனர்.