இந்தியாவில் இதுவரை 5.51 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐ.சி.எம்.ஆர்
இந்தியாவில் ஒரே நாளில் 10,91,251 கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 10,91,251 கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி,
நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை 5 கோடியே 51 லட்சத்து 89 ஆயிரத்து 226 கரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 10ஆம் தேதி 11,63,542 மாதிரிகள் பரிசோதித்ததை அடுத்து, மொத்த பாதிப்பு 5,40,97,975 ஆக இருந்தது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97,570 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 46 லட்சத்தை தாண்டிவிட்டதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,201 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது.