முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் மேலும் 739 பேருக்குத் தொற்று: 7 பேர் பலி

ராஜஸ்தானில் புதிதாக 739 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
COVID-19: Rajasthan reports 739 new cases, 7 more deaths
பகிர்:

ராஜஸ்தானில் புதிதாக 739 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனா அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இன்றைய நிலவரப்படி புதிதாக 739 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,775-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,214-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.