மருந்து கண்டுபிடிக்கும்வரை கவனக்குறைவு வேண்டாம்: பிரதமர் மோடி
கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாமருந்து கண்டுபிடிக்கும்வரை கவனக்குறைவு வேண்டாம்: பிரதமர் மோடி
கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
போபால்: கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, கவனக்குறைவு வேண்டாம் என்ற வாசகத்தை பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டி முடிக்கப்பட்ட 1.75 லட்சம் வீடுகளுக்கு இன்று புதுமணைப் புகுவிழா நடைபெற்றது. காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்த வாசகத்தைச் சொன்னார்.
மேலும், முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம் என்றும் மோடி வலியுறுத்தினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, 83,619 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,691 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.