இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 47 பொருள்களில் விவாதிக்க முடிவு

DIN


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், 47 பொருள்களில் விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைகிறது. 18 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் நிதி தொடர்பான 2 விஷயங்கள் உள்பட 47 முன்வரைவுகள் பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தொற்று நோய் திருத்த மசோதா உள்பட 11 முன்வரைவுகள் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையும் என இரு அவைகளும் தலா 4 மணி நேரம் கூடவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT