இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,77,374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15,789 பேர் குணமடைந்துள்ளனர், 257 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,55,850 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 2,91,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் மேலும் 2,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,71,949 ஆக உயர்ந்துள்ளது. இதில் 31,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,32,349 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 8,178 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 23 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,938 ஆக உயர்ந்துள்ளது. 2,512 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 156 ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT