இந்தியா

நாட்டில் ஒரே நாளில் 77,512 பேர் கரோனாவில் இருந்து மீண்டனர்

ANI

புது தில்லி: நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,512 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி  செய்யப்பட்டுளள்து. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 9,86,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அதே 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 77,512 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை கரோனா பாதித்த 48 ஆயிரம் பேரில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 37,80,107 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.  நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் இது 78 சதவீதம் ஆகும்.

கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உ.பி., தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களே 60 சதவீதம் பேர் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT