இந்தியா

தெலங்கானாவில் மேலும் 1,417 பேருக்குத் தொற்று: 13 பேர் பலி

PTI

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,417 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திங்கள்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 1,417 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,58,513 ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த் தொற்று பாதித்து 1,27,007 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 30,532 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

செப்.13-ம் தேதி 34,427 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மொத்த இதுவரை 21,69,339 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 974 ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT