முகப்பு
இந்தியா

இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறை

நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 10:15 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நிலவரம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்ததாவது: 

"மொத்த கரோனா பாதிப்பில் 5-இல் ஒரு பகுதியினர் மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர். 14 மாநிலங்களில் தலா 5,000-க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வரும் நிலையில் உள்ளனர். 18 மாநிலங்களில் தலா 5,000 முதல் 50,000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கையில், மகாராஷ்டிரத்தில் 29.3 சதவிகிதம், கர்நாடகத்தில் 9.9 சதவிகிதம், ஆந்திரத்தில் 9.4 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 6.8 சதவிகிதம் மற்றும் தமிழகத்தில் 4.7 சதவிகிதம் என 5 மாநிலங்களில் மட்டும் 60 சதவிகிதத்தினர் உள்ளனர். பிற மாநிலங்களில் 39.6 சதவிகிதத்தினர் உள்ளனர்.

மே 23-ம் தேதி 50,000 பேர் குணமடைந்திருந்தனர், ஜூன் 3-இல் 1 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், ஜூலை 30-இல் 10 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், ஆகஸ்ட் 19-இல் 20 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், செப்டம்பர் 4-இல் 30 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், செப்டம்பர் 11-இல் 35 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர். தற்போது நாடு முழுவதும் 38.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட 76 லட்சம் பரிசோதனைகள் உள்பட, நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.