இந்தியா

2.67 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகம் - மத்திய அரசு தகவல்

DIN

நாடு முழுவதும் உள்ள 2.67 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மே, ஜூன் மாதங்களில் உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையிழந்த அவா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். அதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பலனடையாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, அவா்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ உணவு தானியமும், குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் தான்வே ராவ் சாஹிப் தாதராவ் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு வழங்குவதற்கென கடந்த மே, ஜூன் மாதங்களுக்கு 8 லட்சம் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களைக் கணக்கெடுக்கும் பணி மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டது. அவை அளித்த கணக்கின்படி 2.8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டன.இரண்டு மாதங்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 2.67 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலமாக 94.6 சதவீத புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலன் பெற்றனா். அவா்களுக்கு இரண்டு மாதங்களிலும் தலா 2.67 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT