இந்தியா

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை : மத்திய அரசு கைவிரிப்பு

DIN

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய அரசு,  “மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதியில்லை.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரிவசூல் குறைவாக இருப்பதால் தற்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கமுடியாது எனவும் மத்திய அரசு அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT