இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,273 பேருக்குத் தொற்று: 12 பேர் பலி

PTI

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதன்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 2,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,62 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் தொற்று பாதித்து 2,260 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 1,31,447 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 30,401 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT