முகப்பு
இந்தியா

ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 4,250 பேர் பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 11:35 AM
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றையை (செவ்வாய்க் கிழமை) நிலவரப்படி புதிதாக 4,270 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,62,920-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 36,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து புதிதாக 3,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால். மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,25,738-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 656-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.