இந்தியா

2021-ல் சாலைப் போக்குவரத்துத்துறை வருவாய் 35-40% குறையும்

DIN

2021-ஆம் ஆண்டு நிதியாண்டில் சாலைப் போக்குவரத்துத்துறை வருவாய் 35 முதல் 40 சதவிகிதம் வரை குறையும் என்று முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.சி.ஆர்.ஏ.) தெரிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 23-ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவும் விகிதத்திற்கு ஏற்ப ஊரடங்கை மேலும் நீட்டித்து  மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பல்வேறு தொழில்துறைகள் இழப்புகளை சந்தித்துள்ளன. அந்தவகையில் சாலைப்போக்குவரத்துத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலுக்கு இடையே ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதிக அளவிலான மக்கள் பயணிப்பதால் கரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாலைப் போக்குவரத்துத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் அளித்த தகவலின்படி,  50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவதால் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும். எனினும் இதன் மூலம் 2021 நிதியாண்டில் சாலைப் போக்குவரத்து கழகத்திற்கான வருவாய் 35 முதல் 40 சதவிகிதம் குறைய வாயுப்புள்ளது.  இத்தகைய வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பயணக் கட்டணங்களை உயர்த்தி மாநில அரசுகள் சாலைப் போக்குவரத்துத்துறைக்கு உதவ முன்வரவேண்டும். எந்தவொரு குறிப்பிடத்தக்க பணப்புழக்க பற்றாக்குறையையும் தவிர்ப்பதற்காக மோட்டார் வாகன வரி (எம்விடி) ஒத்திவைத்தல் மற்றும் பணியாளர் சம்பளம் போன்ற நிலையான செலவுகளில் மாநில அரசுகள் மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT