இந்தியா

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

DIN

திருப்பதி: வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

ஏழுமலையான் கோயில் ஆண்டுதோறும் 4 முறை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 3 மாத கால இடைவெளியில் வரும் வருடாந்திர உற்சவங்களுக்கு முன் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் இப்பணி மேற்கொள்ளப்படும். தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் கோயிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவது வழக்கம்.

வரும் 19ஆம் தேதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, கோயில் முழுவதும் செவ்வாய்க்கிழமை சுத்தப்படுத்தப்பட்டது. வாசனை திரவிய கலவையைக் கொண்டு கோயில் கருவறை முதல் வெளிவாயில் வரை உள்ள அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன. இதில் கோயில் ஊழியா்கள், அதிகாரிகள் மற்றும் ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இப்பணி காரணமாக, ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 12 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT