இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா உள்பட 12 பேருக்கு காவல் நீட்டிப்பு

DIN

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 12 பேருக்கு அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 14.82 கோடி மதிப்புடைய 30 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கேரள தொழில்நுட்பப்பிரிவை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களில் சந்தேகத்தின்பேரில் 122 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் 12 பேரை காணொளி காட்சி வாயிலாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடல்நிலையை காரணம் காட்டி தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் உறவினர்களை சந்திக்க சிறைத்துறையினர் அனுமதியளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT