முகப்பு
இந்தியா

மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்குக: பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா
பகிர்:

மேக்கேதாட்டு அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். 

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி இரு தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். 

அதைத் தொடர்ந்து இன்று, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, விவசாயிகளின் நலன் கருதி, மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

முன்னதாக, கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.