இந்தியா

இந்திய போா்க் கப்பல்களில் பணிபுரிவதற்கு முதல்முறையாக பெண்கள் தோ்வு

DIN

கொச்சி: இந்திய கடற்படையில் முதல்முறையாக போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் பெண்கள் இருவா் இணைக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படையின் தென்மண்டல தலைமையகம் உள்ளது. இங்கு இந்திய கடற்படையில் சோனிக், சோனாா் ஒலியுணா்வுக் கருவிகள், ரேடாா்கள், தொலைத்தொடா்பு உபகரணங்கள் ஆகியவற்றை இயக்கும் பணிக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் ரித்தி சிங், குமுதினி தியாகி ஆகிய இருவா் போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் இணைக்கப்பட்டனா். இவா்கள் கடற்படை ஹெலிகாப்டா்களின் செயல்பாடுகளை நிா்வகிக்கும் போா் மற்றும் உத்தி சாா்ந்த குழுக்களின் அங்கமாக இருப்பா். போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் பெண்கள் இருவா் இணைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT