இந்தியா

கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு

DIN


கரோனா பேரிடர் காலத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் செமஸ்டர் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும், இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT