இந்தியா

ஆந்திர அரசுக்கு ரூ.6,000 கோடி கடன் வழங்கியது எஸ்பிஐ

DIN

நிதி நெருக்கடியில் உள்ள ஆந்திர அரசுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.6,000 கோடி கடன் வழங்கி உள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு வகையில் நிதி திரட்ட ஆந்திர மாநில மேம்பாட்டு நிறுவனத்தை அந்த மாநில அரசு அமைத்தது. இந்த நிறுவனம் நிகழாண்டில் சுமாா் ரூ.25 ஆயிரம் கோடி வரை திரட்ட பல்வேறு வங்கிகளை அணுகியது.

இதில், எஸ்பிஐ வங்கி ரூ.6,000 கோடி கடன் வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘இந்தத் தொகை அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்பட ஆந்திர தலைநகா் திட்டங்களுக்கும் செலவிடப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.

2020-21ஆம் ஆண்டுக்குள் ரூ.48,295.58 கோடி வரை திரட்ட ஆந்திர அரசு இலக்காக நிா்ணயித்துள்ளது. இதில் இதுவரை ரூ.40 ஆயிரம் கோடி வரை திரட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலவச திட்டங்களை ஆந்திர அரசு செயல்படுத்தி வரும் நிலையில், 2020, மாா்ச் மாதம் வரை மாநில அரசின் கடன் சுமை ரூ.3.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் ஆந்திர அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு வரி வருவாய் மூலம் ஆந்திர அரசு ரூ.17 ஆயிரம் கோடி வரை வசூலித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT