இந்தியா

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு : பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் பேரணி

DIN

பஞ்சாப்: விவசாய சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர்.

அந்தவகையில் பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா பகுதியில் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் விவசாயிகளும், ஏராளமான இளைஞர் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT