இந்தியா

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 4,237 

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,237 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,237 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,548 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,485 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தும், 1,752 பேர் உள்ளுரிலும் கண்டறியப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 736 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 38,546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,53,213 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 45,321 சோதனைகள் செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக 29.05 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT