முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது: 46 லட்சம் பேர் குணமடைந்தனர்

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86, 508 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் கரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 46 லட்சமாக உள்ளது.

Updated On : 24 செப்டம்பர், 2020 at 10:45 AM
நாட்டில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86, 508 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் கரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 46 லட்சமாக உள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  86,508 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,32,518-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,66,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,129 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.  இதனால் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91,149-ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் விகிதம் 1.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 16.86 சதவிகிதமாக உள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 81.55 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பர் 5-ஆம் தேதி 40 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு செப்டம்பர் 16-ஆம் தேதி 50 லட்சத்தை கடந்தது. 

நேற்று  (புதன்கிழமை) மட்டும் 11,56,569 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பரிசோதனை 6,74,36,031-ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.