இந்தியா

ஒடிசாவில் அதிக அளவாக 4,340 பேருக்கு கரோனா: மேலும் 16 பேர் பலி

DIN

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,340 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,340 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் பதிவான கரோனா பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையாகும். இதனால் மொத்த கரோனா பாதிப்பு 1,96,888- ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 38,818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 1,57,265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று (புதன்கிழமை) ஒருநாளில் மட்டும் 50,570 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 29.56 சதவிகிதமாக அதிகரித்துள்ளது 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 16 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 752-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிரி... சிரி...

ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

கருணாவும், காஞ்சிபுரம் இட்லியும்!

திரைக்கதிர்: பாலிவுட் ரவுண்ட் அப் !

SCROLL FOR NEXT