முகப்பு
இந்தியா

நீட் 2020 தேர்வுக்கான விடைகள் வெளியீடு

செப்டம்பர் 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
நீட் 2020 தேர்வுக்கான விடைகள் வெளியீடு
பகிர்:


புது தில்லி: செப்டம்பர் 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட்) கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை பதிவு செய்யும் வாய்ப்பு, இணையதளத்தில் விடைகளை வெளியிடும் போது வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் செப்டம்பர் 13ம் தேதி 154 நகரங்களில் 3,842 மையங்களில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தைப் பொருத்தவரை 14 நகரங்களில் 238 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 

தமிழகத்தில் 1,17,990 போ் உள்பட இந்தியா முழுவதும்  மொத்தமாக 15,97,433 போ் நீட் தோ்வினை எழுதினர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →