முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 12 ஆயிரத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,921 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 8:18 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,921 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 11,921 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,51,153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19,932 பேர் குணமடைந்துள்ளனர், 180 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 35,751 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 10,49,947 பேர் குணமடைந்துள்ளனர். 2,65,033 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 12 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,682 பேர் ஏற்கெனவே கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 188 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.