இந்தியா

கேரளத்தில் மருத்துவ அவசர நிலை: இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள்

DIN

திருவனந்தபுரம்: அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக கேரளத்தில் மருத்துவ அவசர நிலை பிறப்பிகபப்ட வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கழகம் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரளதில் கடந்த 28 நாட்களில் ஒரு லட்சதிற்கும் அதிகமானவர்களுக்கு   கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு  இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. எனவே இந்திய மருத்துவக் கழகம் மாதிரியான முறையான அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

தீவிரமான சோதனைகள் மூலம் தொற்று பாதிப்பிற்கு உள்ளனவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதே தொற்று சமூகப் பரவலாக மாறாமல் தடுக்கும் வழியாகும். எனவே ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வரைக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

அதேநேரம் அரசும் மருதுவமனைகளில் இருக்கும் கட்டில்களின் எண்ணிக்கை, அவசர சிகிச்சைப் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட இருப்பு விபரங்களை நேரடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT