முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் கடந்த 7 நாள்களாக யாருக்கும் தொற்று இல்லை; ஊடகத்தினருக்கு இலவச பரிசோதனை

அஸ்ஸாமில் கடந்த 7 நாள்களாக யாருக்கும் தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தகவல் தெரிவித்துள்ளார். 

Updated On : 22 ஏப்ரல், 2020 at 4:33 PM
பகிர்:

அஸ்ஸாமில் கடந்த 7 நாள்களாக யாருக்கும் தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது: 

நாடு முழுவதும் கரோனா தடுப்புப்  பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஸ்ஸாமில் இதுவரை 5,789 மாதிரிகள்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 214 மந்திரிகளுக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை. கடந்த 7 நாள்களில் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. 

Advertisement

மேலும், மும்பையில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அஸ்ஸாமிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 25 ஆம் தேதி கவுகாத்தி மருத்துவக் கல்லூரியில் பத்திரிகையாளர்கள், நிருபர்களுக்கு இலவச கரோனா பரிசோதனை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அஸ்ஸாமில் தற்போது கரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.