முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 500 ஐ நெருங்குகிறது!

கர்நாடகத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2020 at 2:58 PM
பகிர்:


கர்நாடகத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 22 மாலை 5 மணி முதல் ஏப்ரல் 23 பகல் 12 மணி வரையிலும் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை மொத்தம் 443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானதில் 17 பேர் பலியாகியுள்ளனர், 141 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கர்நாடக மாநில சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆகவும், பலி எண்ணிக்கை 681 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 4,258 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.